மே 20 வரை நாடு முழுவதும் கடும் மழை! | தினகரன்

மே 20 வரை நாடு முழுவதும் கடும் மழை!

மே 20 வரை இலங்கை முழுவதும் கடும் மழை-Weather forecast-Rain Until May 20th in Sri Lanka

 

இம்மாதம் 20 ஆம் திகதி வரையான எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள பகுதியிலும் மழைக்கான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீற்றரிலும் (100 செ.மீ) கூடிய கடும் மழை ஏற்படலாம் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை அண்டிய ஆழமற்ற, ஆழமான கடல் பிரதேசங்களில் தற்போது நிலவும் மழைக்கான நிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிரதேசங்களின் சில பிரதேசங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மலை மற்றும் ஆறுகளை அண்டி வாழும் மக்கள், அதிக மழையினால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...