விபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் | தினகரன்


விபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்

 

பதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹாலிஎல பகுதியில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில், வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் பயணஞ் செய்த 03 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி, பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...