இலங்கை கிரிக்கெட் கணக்கறிக்கை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிப்பு | தினகரன்

இலங்கை கிரிக்கெட் கணக்கறிக்கை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் 2017 ஆம் ஆண்டு நிதிநிலை, சாதனை அளவுக்கு 1.9 பில்லியன் ரூபாய் மிகை பணப்புழக்க அளவுடன் (தற்போதைய நிகர சொத்துக்கள்) சாதகமான பெறுபேற்றை காட்டியுள்ளது. இது 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் சிறந்த பணப்புழக்க அளவாகும்.

2016 ஆம் ஆண்டில் SLC இன் பணப்புழக்க அளவுகள் எதிர்மறையாக 572 மில்லியன் ரூபாவாக இருந்ததோடு, 2015 இல் அது உச்சமாக 985 மில்லியன் ரூபாவாகவும், மிக மோசமான ஆண்டாக 2011 இல் இருந்தது. அந்த ஆண்டில் எதிர்மறையாக 4.25 பில்லியன் ரூபாய் இருந்தது.

இதேவேளை, SLC இன் நிகர வருமானம் (நிகர இலாபம்) 2017 இல் 2.12 பில்லியன் ரூபாய் உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 மில்லியன் ரூபாய் வருமானமே ஈட்டப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 33 மடங்கு அதிகரிப்பு என்பதோடு SLC இன் மூலோபாய வளர்ச்சித் திட்டம் மற்றும் விவேகமான நிதி முகாமை மூலமே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வருமானம் ருபாய் 6 பில்லியனாகும். இது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிக வருமானம் என்பதோடு முந்தைய ஆண்டு வருமானத்தை விடவும் கிட்டத்தட்ட 100 வீத அதிகரிப்பாகும்.

2015 ஆம் ஆண்டில் பணம் மற்றும் பண ஈடு 117 மில்லியன் ரூபாவாகவும் 2016 இல் அது 410 மில்லியன் ரூபாவாகவும் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டில் 2.4 பில்லியன் ரூபாவாக பாய்ச்சல் கண்டுள்ளது.

2015 டிசம்பர் 31 இல் 4 பில்லியன் ரூபாவாக இருந்த கடன் சுமையை தற்போது 1.3 பில்லியன் ரூபாவாக குறைப்பதற்கு SLC இனால் முடிந்துள்ளது. இதனை தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் விவேகமான நிதி முகாமையாலேயே அடைய முடிந்துள்ளது.

2017 இல் இலங்கை கிரிக்கெட் சபை உள்நாட்டு போட்டித் தொடர்களுக்கு முதலீட செய்த தொகை 464 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 241 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் மற்றும் அபிவிருத்திக்கு முதலீடு செய்த தொகை 724 மில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பதோடு அதுவே 2016 ஆம் ஆண்டு 584 மில்லியன் ரூபாயே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

* 2017 இல் நிகர வருமான அதிகரிப்பு ரூபா 12 பில்லியன்

* 2017 இல் மொத்த வருமான உயர்வு ரூபா 19 பில்லியன் (வரலாற்றில் அதிகமாகும்)

* 2017 இல் பணப்புழக்கம் சாதகமாக ரூபா 97 பில்லியனாக திரும்பியது

* 2017 இல் சாதனை தொகையாக பணம் மற்றும் பண ஈடு ரூபா4 பில்லியனாகும் 


Add new comment

Or log in with...