Home » நிர்க்கதியாக வாழ்ந்த குடும்பத்தினருக்கு வீடு நிர்மாணித்துக் கொடுத்த படையினர்

நிர்க்கதியாக வாழ்ந்த குடும்பத்தினருக்கு வீடு நிர்மாணித்துக் கொடுத்த படையினர்

by Gayan Abeykoon
November 15, 2023 9:24 am 0 comment

ராணுவப்படையின் 233 ஆம் காலாட்படைப் பணியகம் மட்டக்களப்பு பிரதேசத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. வீடற்று நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகளிலும் படையினர் இறங்கியுள்ளனர். உலர் உணவு மற்றும் உடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவப்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரியும் இருபத்து மூன்றாவது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே.யு.பீ. குணரத்னவின் வழிகாட்டலில் 233 ஆம் காலாட் படையினர் அண்மையில் வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்தனர். இளவயதிலேயே தனது தந்தையை இழந்து, உடல் ஊனமுற்ற தாயின் அரவணைப்பில் உறைவிடமின்றி வாழ்ந்துவரும் எட்டு வயதுடைய சிறுவனுக்கு படையினர் வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.

நிர்மாணப் பணிகள் மற்றும் மரவேலைகள் அனைத்துக்கும் இங்குள்ள முகாமிலுள்ள இரானுவத்தினரின் மனிதசக்தியே முற்றாகப் பாவிக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சிங்கள, முஸ்லிம், தமிழ் வர்த்தகர்களும் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனமுவந்து வழங்கியுள்ளனர்.

புதிய வீட்டின் குடிபுகும் விழா சிறுவன் நிலுஷா சந்திகுமாரின் எட்டாவது பிறந்த தினத்தையொட்டியதாக மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரியும், இருபத்து மூன்றாவது காலாட்படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே.யு.பீ. குணரத்ன பங்கேற்றார். வெலிக்கந்ைத பிரதேச செயலாளர் திருமதி எம்.எம். ஹைருன்நிசா கௌரவ அதிதியாக பங்கேற்றார். இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் சிவில் அமைப்ப்புகளின் பிரதிநிதிகளும் இநிகழ்வுகளில் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

வருகை தந்திருந்த பிரதம அதிதி, மேஜர் ஜெனரல் எம்கே.யு.பீ. குணரத்ன மற்றும் கௌரவ அதிதி உட்பட்ட விருந்தினர்களுக்கு கிராமமக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கண்டிய மற்றும் கிராமிய நடனத்துடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். பிரதம அதிதி புதிய வீட்டுக்கான திறவுகோலை நிலுசா சந்திரகுமாரிடம் கையளிக்க, வீடு சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் பிறந்தநாள் நிகழ்வுகளிலும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுவனுக்கு பரிசுகள், பாடசாலை உபகரணங்கள், வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள் போன்றவை நன்கொடையாளர்களால் வழங்கிவைக்கப்பட்டன. இராணுவதினர் நிர்மாணித்துக் கொடுத்த ஆறாவது வீடு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இருண்ட வாழ்க்கையை வாழ்ந்துவந்த சிறுவனும் அவனது தாய் மற்றும் குடும்பத்தினரும் தற்போது மிகவும் சந்தோசமாக புதிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

“எமக்கு கரம் கொடுத்து உதவ யாருமே முன்வராத பொருளாதார நெருக்கடியான இக்காலகட்டத்தில் எமக்கு இல்லம் வழங்கிய இராணுவத்தினரின் இந்த உதவியை நாம் ஒருபோதும் மறவோம்” என்று அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எம்.ஏ.பகுர்டீன்…

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT