நாளை நள்ளிரவு முதல் பஸ் சேவை நிறுத்தம்? | தினகரன்

நாளை நள்ளிரவு முதல் பஸ் சேவை நிறுத்தம்?

நாளை நள்ளிரவு முதல் பஸ் சேவை நிறுத்தம்-Private Bus Owners Strike

 

நாளை நள்ளிரவு (17) முதல் நாடு தழுவிய பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்பார்த்த அளவில், அமைச்சரவையினால் பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தவில்லை எனவும், 6.56% கட்டண அதிகரிப்பு போதாது எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணங்களை 20% இனாலும், குறைந்தபட்ச கட்டணத்தை ரூபா 15 ஆகவும் அதிகரிக்குமாறு தெரிவித்து, நாளை நள்ளிரவு (17) முதல் தாம் சேவையிலிருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...