எட்டு மாத குழந்தையும் பலி | தினகரன்

எட்டு மாத குழந்தையும் பலி

இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்திய கண்ணீர் புகையை சுவாசித்ததால் காசாவில் எட்டு மாத குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளது.

திங்கட்கிழமை இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் காசாவின் கிழக்கு பகுதியில் வைத்து லெய்லா அல் பன்தூர் என்ற பெண் குழந்தையே கொல்லப்பட்டுதுள்ளது. இந்த குழந்தையின் இறுதிக் கிரியை நேற்று நடைபெற்றது.

பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்திய திங்களன்று நடந்த தாக்குதல்களில் மொத்தம் 58 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு அதிகாரிகள் அடங்குகின்றனர். இதில் மேலும் 2,771 காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 122 சிறுவர்கள் மற்றும் 44 பெண்கள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்களில் 1,204 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் 27 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். 


Add new comment

Or log in with...