Home » மலையக சமூக மாற்றத்துக்கு வழிவகுத்துள்ள பட்ஜெட்

மலையக சமூக மாற்றத்துக்கு வழிவகுத்துள்ள பட்ஜெட்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

 ல்விப் புரட்சியால் மலையக சமூக மாற்றத்துக்காக தாம் செயற்படும் நிலையில், இந்த நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல 2024 வரவு -செலவுத்திட்டம் வழிவகுத்துள்ளதாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத் தலைவரும் இ.தொ.கா.வின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

2024 வரவு -செலவுத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்காக காணி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஆரம்பக்கட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கான எமது பயணத்தின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியுள்ளது. மத்திய மாகாணம் கல்வி மையமாக மாறுவதற்குரிய முன்மொழிவுகளும் உள்ளதுடன், தொழில்நுட்பம்சார் அறிவை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு இளைஞர், யுவதிகளுக்கு கிடைக்கும்.

வரவு -செலவுத்திட்டம் தயாரிக்க முன்னர் ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் எமது யோசனைகளை முன்வைத்தோம். அவற்றுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT