தொழிற்சந்தைப் போட்டிக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த அரசு திட்டம் | தினகரன்

தொழிற்சந்தைப் போட்டிக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த அரசு திட்டம்

 

கல்வியின் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய அவர்:

நாட்டில் எந்தவொரு பிள்ளையும் சாதாரண தரப் பரீட்சையில் தேறத்தவறியதற்காக, உயர்தரக் கல்வியைத் தொடரும் உரிமையை இழக்க முடியாது. 2019ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு 13 வருட காலப் பாடசாலைக் கல்வி உறுதி செய்யப்படும். இது எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையை வெற்றி கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த செயல் படுத்தப்படும் இத் திட்டம் தொடர்பாக பல விமரசனங்கள், முறைப்பாடுகள், விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்வியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. எதிர்கால தொழிற்சந்தை கடும் சவால்மிக்கதாக அமையவுள்ளது. இதைக் கருத்திற்கொண்டே தொழில் பயிற்சி பெற்ற மாணவர்களை பாடசாலை மட்டத்தில் உருவாக்க இத்திட்டம் கொண்டுவரப் பட்டதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...