ஒன்றரைக் கோடி ரூபா காசோலை மோசடி: பெண் தலைமறைவு | தினகரன்

ஒன்றரைக் கோடி ரூபா காசோலை மோசடி: பெண் தலைமறைவு

 

கல்கிஸ்சையில் 'சித்தாரா பத்திக்' எனும் பெயரில் "பத்திக்" ஆடைகளை விற்பனை செய்து வந்த மேற்படி படத்திலுள்ள பெண், ஒன்றரைக் கோடி ரூபா போலிக் காசோலையை ஆடை உற்பத்தியாளருக்கு வழங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இப்பெண்ணை உடன் கைது செய்வதற்காக கல்கிஸை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. இதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். ஜோன் சிதாரா கீதானி களுஆரச்சி எனும் 50 வயதான இப்பெண் (தே.அ.இ- 687611799V) மொறட்டுவை உயன வீதி இலக்கம் 06 மற்றும் கெஸ்பேவ தல்கஹஹேன வீதி இலக்கம் 194/31 ஆகிய இரண்டு முகவரிகளைக் கொண்டுள்ளார்.

இவருக்கெதிராக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் 24 முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் பற்றிய தகவல் தெரிவோர் கல்கிசை விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு 011-2729621 அல்லது கல்கிசை பிரதான பொலிஸ் நிலையத்துக்கு 071-8591664 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...