பரபரப்பான சூழலில் 29ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது | தினகரன்

பரபரப்பான சூழலில் 29ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

 

''தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயல்கத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டவுள்ளார்'' என்று அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் சில யோசனைகளும், கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவிரி வரைவுத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.


Add new comment

Or log in with...