Friday, March 29, 2024
Home » குருநாகலில் நடமாடும் வரலாற்று அருங்காட்சியகம்

குருநாகலில் நடமாடும் வரலாற்று அருங்காட்சியகம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

 “It’s about time” நடமாடும் வரலாற்று அருங்காட்சியகம், உள்ளூர்வாசிகளுக்கு நாட்டின் வளமான மற்றும் பன்முகத்தன்மையுடன்கூடிய வரலாற்றுடன் இணைவதற்கான ஒரு வாரகால வாய்ப்பை வழங்கும் விதமாக நவம்பர் 08 ஆம் திகதியன்று குருநாகலுக்கு வந்தது. இந்த அருங்காட்சியகம் நவம்பர் 08 முதல் 14 வரை குருநாகல் நகர மண்டபத்தில், ‘Search for Common Ground மற்றும் Collective for Historical Dialogue and Memory’ ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த முன்முயற்சியானது இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல் (SCOPE) அமைப்பினால் ஆதரிக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகம் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டு, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து GIZ ஆல் அமுல்படுத்தப்பட்டது.

இலங்கை நாடு முழுவதிற்குமான குறித்த அருங்காட்சியக சுற்றுப்பயணமானது 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு, COVID-19 தொற்றுநோயால் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக குருநாகலில் தரித்து நிற்கிறது. இதற்கு முன்னர் இந்த அருங்காட்சியகம் நாடு முழுவதும் 6 இடங்களில் முழுமையாக இடம்பெற்றது. கலைஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் தொகுக்கப்பட்ட கண்காட்சிகள் மூலம் இலங்கையின் சுதந்திரமான வரலாற்றை உயிர்ப்பிக்கும் வண்ணம், வரலாற்று புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட கல்விசார் அனுபவத்தை இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு வழங்குகிறது. கடந்த வாரம் முழுவதும் இந்த அருங்காட்சியகத்தில் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், இளைஞர் வலையமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் மேற்கொள்வோர் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT