4 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் சடலமாய் மீட்பு | தினகரன்

4 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் சடலமாய் மீட்பு

4 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் சடலமாய் மீட்பு-Body Found-Mariyawatta Gampola

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் இன்று (14) காலை 10.00 மணியளவில் அப்பகுதியில் அமைந்த ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம். ஜெயசேன வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நான்கு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இவர் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பல கோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...