துப்பாக்கிச் சூட்டில் லொறியில் இருந்தவர் பலி | தினகரன்

துப்பாக்கிச் சூட்டில் லொறியில் இருந்தவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் லொறியில் இருந்தவர் பலி-Shooting at Trincomalee

 

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர் மீது கார் ஒன்றில் வந்த மூவரால்  இன்று (11) அதிகாலை  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும் தெல் குமார என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் வந்த மூவர், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீத்)

 


Add new comment

Or log in with...