7 கிலோ தங்கத்துடன் விமான நிலைய விற்பனையக ஊழியர் கைது | தினகரன்

7 கிலோ தங்கத்துடன் விமான நிலைய விற்பனையக ஊழியர் கைது

7 கிலோ தங்கத்துடன் விமான நிலைய விற்பனையக ஊழியர் கைது-Duty free shop Staff Arrested with 7kg Gold

 

சுமார் 7 கிலோ கிராம் தங்க பொதியுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வரி விலக்கு விற்பனையக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபா 5 கோடி பெறுமதியான குறித்த தங்க பொதியை இடுப்பு பகுதியில் மறைத்து, பயணிகள் வருகை தரும் பகுதியில் வைத்து இந்தியர்கள் இருவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த வேளையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

43 வயதான குறித்த நபரிடமிருந்த பொதியில் 61 தங்கக்கட்டிகள் மற்றும் 1 கிலோ கிராம் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இந்தியர்கள் இருவரால் இப்பொதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நேற்று (04) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரிடமிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...