நீக்கப்பட்ட மரக்கூட்டுத்தாபன தலைவரின் இடத்திற்கு புதிய நியமனம் | தினகரன்


நீக்கப்பட்ட மரக்கூட்டுத்தாபன தலைவரின் இடத்திற்கு புதிய நியமனம்

நீக்கப்பட்ட மரக்கூட்டுத்தாபன தலைவரின் இடத்திற்கு புதிய நியமனம்-New Chairman Appointed for State Timber Corporation

 

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்றைய தினம் (04) அவருக்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.மசு.மு.வின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான (2004 பாராளுமன்ற தேர்தல்) அநுருத்த பொல்கம்பொல, கடந்த பெப்ரவரி 10 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் சமயத்தில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஏற்பாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,  கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பீ. திஸாநாயக்க, இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிர்வரும் மே 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...