Home » கிரிக்கெட் வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விலகல்

கிரிக்கெட் வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விலகல்

- தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததாலேயே விலகுவதாக அறிவிப்பு

by Prashahini
November 14, 2023 12:17 pm 0 comment

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய இந்த மனு தொடர்பான விசாரணையை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT