கண்டி இன கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு வி.மறியல் நீடிப்பு | தினகரன்

கண்டி இன கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு வி.மறியல் நீடிப்பு

கண்டி இன கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு வி.மறியல் நீடிப்பு-Amith Weerasinghe & 26 Others Further Remanded Till May 14

 

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 27 பேருக்கும் எதிர்வரும் மே 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. .

கண்டி, திகன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மார்ச் 05 ஆம் திகதி இடம்பெற்ற இனவாத தாக்குதல்கள், கடை எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் மார் 08 ஆம் திகதி, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் இது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (02) தெல்தெனிய நீதவான் எம்.எச். பரிக்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் மே 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 


Add new comment

Or log in with...