அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-Kandy-Riot-Amith-&-17-Others-Further-Remanded-Till-Apr-23

 

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. .

கடந்த மார்ச் 08 ஆம் திகதி அதிகாலை, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். கைது செய்யப்பட்டதோடு, இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 08 பேர் வெவ்வேறு தினங்களில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய சந்தேகநபர்களான குறித்த சந்தேகநபர்கள் 10 பேரும் அவசரகால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...