மடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில் | தினகரன்


மடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில்

மடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில்-Madawala Bus Accident 32 Injured

 

மடவளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை - குருணாகல் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் புரண்டு வீழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 32  பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் கண்டி உள்ளிட்ட அப்பிரதேசத்தை அண்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...