யாழ் பாதுகாப்பு படையின் வெசாக் வலயம் | தினகரன்

யாழ் பாதுகாப்பு படையின் வெசாக் வலயம்

யாழில் பாதுகாப்பு படையின் வெசாக் வலயம்-Yapa Patunai Daham Amawai Vesak Zone

 

யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

'யாபா பட்டுனய் தஹம் அமாவய்' எனும் பெயரில், இன்று (29) முதல் எதிர்வரும் மே முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த வெசாக் வலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

புத்தர் ஞானம் பெற்று 2561 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு இடம்பெறும் இந்த வெசாக் நிகழ்வுகள், இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகள் தினகரன், தினமின, டெய்லி நியூஸ் ஆகிய இணையத்தளங்களின் பங்களிப்புடன் லேக் ஹவுஸ் டிஜிட்டலின் ஊடக அனுசரணையில் இடம்பெறுகின்றன.

இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் வெசாக் தோரணங்கள், வெளிச்ச கூடு கண்காட்சிகள், பௌத்த பக்தி பாடல் நிகழ்வுகளுடன் அன்ன தானமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...