இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கும் வி.மறியல் நீடிப்பு (UPDATE) | தினகரன்

இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கும் வி.மறியல் நீடிப்பு (UPDATE)

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் சரண்-5 Kills-Horana Rubber Factory Owner Surrendered

 

சரணடைந்த ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதன் முகாமையாளர் மற்றும் அதன் சிரேஷ்ட ஆய்வக கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் சரண் (மு.ப. 10.48)

ஐவரை பலி கொண்ட விபத்து இடம்பெற்ற, ஹொரணை, பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் இன்று (27) நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

கடந்த ஏப்பரல் 19 இல் இடம்பெற்ற, குறித்த சம்பவம் தொடர்பில், கைதான தொழிற்சாலையின் முகாமையாளருக்கும் அதன் சிரேஷ்ட ஆய்வக கட்டுப்பாட்டாளருக்கும் இன்று (27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...