நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் சட்டத்தரணி | தினகரன்

நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் சட்டத்தரணி

 

உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் சட்டத்தரணி இந்து மல்ஹோத்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்ச நிதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள உச்ச நீதிமன்றில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு முதல் உச்ச நீதி மன்ற சட்டத்தரணியாக செயல்பட்டு வருகிறார். இந்து மல்ஹோத்ரா சட்டத்தரணியாக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து மல்ஹோத்ரா இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Add new comment

Or log in with...