பிரிந்த 16 ஶ்ரீலசுக எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனம் கோரி கடிதம் | தினகரன்

பிரிந்த 16 ஶ்ரீலசுக எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனம் கோரி கடிதம்

பிரிந்த 16 ஶ்ரீலசுக எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனம் கோரி கடிதம் -16 SLFP'er Request to Allocate Opposition Seats

 

அரசாங்க பதவிகளிலிருந்து வெளியேறிய 16 ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனங்களில் தமக்கு இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று (27) அது குறித்து பாராளுமன்ற செயலாளரிடம் கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத்தில் குறித்த கடிதத்தை கையளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாபா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதற்கமைய, எதிர்வரும் மே 08 ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆசனங்களிலிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...