நைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை | தினகரன்

நைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை

லஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு தடை விதிப்பது குறித்து சவூதி அரேபிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் லஸ்ஸா காய்ச்சல் காரணமாக நைஜீரியாவில் குறைந்தது 90 பேர் உயிரிழந்திருப்பதோடு நாடெங்கும் 1,000க்கும் அதிகமானோருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது.

எலியை சாப்பிடுபவர்கள் அல்லது எலி சிறுநீர் கழித்த உணவை சாப்பிட்டதால் இந்த வைரஸ் மனிதருக்கு பரவி இருப்பதோடு இந்த தொற்று உடையவரின் உடல் திரவங்கள் ஊடே மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஆபிரிக்காவில் அதிகபட்சமாக நைஜீரியாவில் இருந்து சுமார் 95,000 யாத்திரிகர்கள் மக்கா சென்று ஹஜ் கடைமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நைஜீரிய யாத்திரிகர்கள் ஊடே லஸ்ஸா காய்ச்சல் பரவும் அபாயம் குறித்து சவூதி நிர்வாகம் அச்சம் அடைந்திருப்பதாக நைஜீரியாவின் தேசிய ஹஜ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் கடமை வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. 


Add new comment

Or log in with...