எண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி | தினகரன்

எண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்தனர். அந்த எண்ணெய்க் கிணறு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இரவுப் பொழுதில் மூண்ட அந்தத் தீச் சம்பவத்தில், குறைந்தது மூன்று வீடுகள் பற்றி எரிந்தன. நேற்று காலை வரை கட்டுக்கடங்காமல், அந்தத் தீ எரிந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். எண்ணெய் கிணறு சட்டவிரோதமாக தோண்டப்பட்டிருப்பதாகவும் ஒருவர் புகைப்பிடித்ததன் காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் கிழக்கு அச்சே பொலிஸ் தலைமை குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து தோன்றிய தீப்பிழம்பு வீடுகள் மற்றும் மரங்களை விடவும் மேலே உயர்ந்து காட்சி தந்தது. 250 மீற்றர்கள் (820 அடி) ஆழம் கொண்ட இந்த கிணறு பொங்கி ஓடியதால் எண்ணெய் சேகரிக்க அங்கு குடியிருப்பாளர்கள் கூடியுள்ளனர்.

அச்சேவில் இவ்வாறான சட்டவிரோத எண்ணெய் தோண்டும் நடவடிக்கை பொதுவான விடயமாக மாறியுள்ளது. 


Add new comment

Or log in with...