ஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை | தினகரன்


ஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை

 

பிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாட்சப்பை பயன்படுத்தும் வயது வரப்பு தற்போது 13 ஆக உள்ளது. எனினும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, இந்த வயது வரம்பு உயர்த்தப்படவுள்ளது. இந்த புதிய விதிகளுக்கு அமைய பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப், பயனர்கள் தமது வயதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு விதிமுறை வரும் மே 25 ஆம் திகதி அமுலுக்கு வரும்போது, தமது தகவல்களை நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரவுள்ளது. இதன்போது தமது தனிப்பட்ட தரவுகளை அழிக்கும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும் ஐரோப்பாவுக்கு வெளியில் தனது வயது வரம்பை தொடர்ந்தும் 13 ஆக தக்கவைத்துக் கொள்ள வாட்சப் தீர்மானித்துள்ளது. 


Add new comment

Or log in with...