ஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு | தினகரன்

ஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு

ஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு-On Apr 29-30 Liquor Shop Closed on Vesak

 

ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், சுப்பர் மார்கெட்களில் மதுபானம் விற்பனை செய்வதை இடைநிறுத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பூரணை தினமான ஞாயிற்றுக்கிழமை (29) பௌத்தரகளுக்கான வெசக் முழுநோன்மதி தினமாக அனுஷ்டிக்கப்படுவதையிட்டு குறித்த அறிவிப்பினை அரசாங்கம் விடுத்துள்ளது.

அதற்கமைய, அன்றைய இரு தினங்களிலும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள், விலங்குகளை அறுக்கும் மடுவம், என்பவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கெசினோ உள்ளிட்ட சூதாட்ட நிலையங்கள், கிளப்கள் போன்றவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...