ஐ.தே.க பதவிகளில் மாற்றம் | தினகரன்

ஐ.தே.க பதவிகளில் மாற்றம்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் பொருளாளராக ஹர்ச டி சில்வாவும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

கட்சியின் அடுத்த பதவிகள் தொடர்பில் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அதன் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடிய போதே , இந்த பதவிகளுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...