Home » நேரடி இரசாயனங்கள் மூலம் பழங்களைப் பழுக்க செய்யும் வியாபாரிககள் மீது சட்டநடவடிக்கை

நேரடி இரசாயனங்கள் மூலம் பழங்களைப் பழுக்க செய்யும் வியாபாரிககள் மீது சட்டநடவடிக்கை

by damith
November 14, 2023 11:55 am 0 comment

பூநகரிச் சந்தைகளில் பழங்களைப் பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு- பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெளிவூட்டினர்.

கடந்த வெள்ளிக்கிழமை பூநகரி பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பலசரக்கு கடைகளின் களஞ்சியப் பகுதி மற்றும் விற்பனைப் பகுதிகளில் மாசடையும் வகையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அழிக்கப்பட்டதோடு வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மேலும் பழவிற்பனை நிலையங்களை சோதனையிட்ட போது, அங்கு பழங்களைப் பழுக்கவைக்கப் பயன்படுத்தும் இரசாயனங்கள் தெளிவுகருவிகளின் உதவியோடு கண்டு பிடிக்கப்பட்டு பழ வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

(சாவகச்சேரி விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT