தொடர் ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஆர்மேனிய பிரதமர் இராஜினாமா | தினகரன்

தொடர் ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஆர்மேனிய பிரதமர் இராஜினாமா

 

ஆர்மேனிய பிரதமர் செர்ஸ் சர்க்ஸ்யான் ஆர்ப்பாட்டக்காரர்களின் அழுத்தத்தை அடுத்து பதவி விலகிய நிலையில் தலைநகர் யெர்வானில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பத்து அண்டுகள் ஜனாதிபதியாக இருந்த பின் கடந்த வாரம் பிரதமராக பதவி ஏற்ற சர்க்ஸ்யான் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

“வீதி செயற்பாடுகள் எனது பதவிக்கு எதிராக உள்ளது. உங்களது கோரிக்கையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று தனது இராஜினாமாவை அறிவித்த சர்க்ஸ்யான் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் கரென் கரடியான் பதில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி அர்மென் செர்கிசியான் இந்த இராஜினாமாவை ஏற்றதோடு அரசும் கலைந்தது.

சர்க்ஸ்யானை பதவி விலகக் கோரி ஆர்மேனியாவில் கடந்த 11 நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன. இதில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மேலும் இரு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டனர். 


Add new comment

Or log in with...