பாலி தீவுக்கு தனியே சுற்றுலா சென்ற 12 வயது ஆஸி. சிறுவன் | தினகரன்

பாலி தீவுக்கு தனியே சுற்றுலா சென்ற 12 வயது ஆஸி. சிறுவன்

அவுஸ்திரேலியாவில் பெற்றோருடன் கோபித்துக் கொண்ட 12 வயது சிறுவன் ஒருவன் பெற்றோரின் கடனட்டையை பயன்படுத்தி தனியே இந்தோனேசியாவுக்கு பயணித்திருப்பது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமது பெற்றோர் இந்தோனேசிய தீவான பாலிக்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்ததை அடுத்தே சிட்னியைச் சேர்ந்த இந்த சிறுவன் இணையதளத்தின் மூலம் விமான டிக்கெட் மற்றும் தங்குமிடங்களை பதிவு செய்துள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவன் தனது கடவுச்சீட்டு மற்றும் பாடசாலை அடையாள அட்டையை மாத்திரம் பயன்படுத்தி பேர்த் வழியாக பாலியை சென்றடைந்துள்ளான். இந்நிலையில் இந்த சிறுவன் கடந்த மார்ச் 17 ஆம் திகதி பாலி நகரில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிறுவன் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்து ஒன்பது தினங்களுக்கு பின்னரே அவன் மீட்கப்பட்டுள்ளான்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க இது பற்றி முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய பொலிஸார் உறுதி அளித்துள்ளனர். 


Add new comment

Or log in with...