விமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள் | தினகரன்

விமான ஒட்சிசன் முகமூடியை வாய்க்கு அணிந்த பயணிகள்

 

பெண் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்க விமானத்தின் இன்ஜின் வெடிப்பு சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் போல் ஒட்சிசன் முகமூடியை தமது மூக்குக்கு பதில் தவறாக வாயில் அணிந்திருக்கும் புகைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நியூயோர்க்கில் இருந்து டல்லஸ் நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த செளத்வெஸ்ட் விமானத்தில் இன்ஜின் நடுவானத்தில் வெடித்து ஜன்னல் கதவொன்றை உடைத்ததை அடுத்து ஜன்னலோரத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தின்போது அவசர சூழலில் அணியும் ஒட்சிசன் முகமூடியை பயணிகள் தவறாக அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகதளத்தில் பிரபலமடைந்துள்ளது. அந்த விமானத்தின் பயணியான மார்டி மார்டினஸ் என்பவரே இந்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதன்மூலம் விமான பயண பாதுகாப்பு குறிப்புகளை பயணிகள் கவனிப்பதில்லை என்பது உறுதியாகியிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். விபத்துக்கு உள்ளான விமானம் பாதுகாப்பான முறையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 


Add new comment

Or log in with...