உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை | தினகரன்

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

 

உலகின் முதலாவது அணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை அமெரிக்க மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் காயத்திற்கு உள்ளான அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கே மெரிலாண்ட், ஜோன் ஹொப்கிஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்த ஒருவரின் ஆணுறுப்பு, விதைப்பை மற்றும் அடிவயிற்று பகுதி தானமாக பெறப்பட்டு இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த படை வீரருக்கு தனது பாலியல் செயற்பாட்டை மீண்டும் பெற முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் 26 ஆம் திகதி 11 பேர் கொண்ட குழு இந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 14 மணி நேரத்திற்கு மேற்பட்ட காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...