பிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை | தினகரன்

பிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை

பிரிட்டிஷ் இளவரசர் மனைவி கேட் வில்லியம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தை அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆறாவது கொள்ளுப் பேரப் பிள்ளை ஆகும். இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இக்குழந்தை வில்லியம், கேட் தம்பதியினருக்கு பிறந்த மூன்றாவது குழந்தையாகும்.

முன்னதாக பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ், டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜோர்ஜ் என்ற 4 வயது ஆண் குழந்தையும் சார்லோட் என்ற 2 வயதுப் பெண் குழந்தையும் உள்ளனர். லண்டனில் உள்ள செண்ட் மேரீஸ் வைத்திய சாலையில் கடந்த திங்களன்று மகப்பேறு முடிந்து 7 மணித்தியாலங்களுக்குப் பின் இளவரசி கேட் மற்றும் வில்லியம் ஆகியோர் தமது மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றனர். 


Add new comment

Or log in with...