யெமனில் திருமண நிகழ்வில் வான் தாக்குதல்: பலரும் பலி | தினகரன்

யெமனில் திருமண நிகழ்வில் வான் தாக்குதல்: பலரும் பலி

 

வடகிழக்கு யெமன் கிராமத்தில் திருமண நிகழ்வொன்றின் மீது சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர் மற்றும் மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சிதைவடைந்த 40 சடலங்கள் வந்திருப்பதாக உள்ளுர் மருத்துவமனை தொலைபேசி ஊடே ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளது. திருமணத்தில் ஒன்று திரண்டவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த வான் தாக்குதலில் 30 சிறுவர்கள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.

“இந்த அறிவிப்பு குறித்து நாம் தீவிரமாக அவதானம் செலுத்துகிறோம், இது பற்றி முழு விசாரணை நடத்தப்படும்” என்று சவூதி தலைமை கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். யெமனில் மேற்குல ஆதரவு அரசை மீண்டும் கொண்டுவரும் நோக்கிலேயே சவூதி கூட்டணி அங்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. அது தொடக்கம் பாடசாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் என யெமனில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...