பொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு | தினகரன்

பொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு

 இலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20) இலண்டன் விண்ட்சர் மாளிகையில் நிறைவடைந்தது.

இலண்டன் நேரப்படி மாலை 4.00 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 8.30) நிறைவடைந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரச தலைவர்கள் நேற்றுக் காலை 9.35 க்கு விண்ட்சர் மாளிகையை வந்தடைந்தனர். காலை 9.55 க்கு முதலாவது அமர்வு ஆரம்பமானது.11.15 மணிக்கு இரண்டாவது அமர்வும் நடைபெற்றது. பகல்போசன இடைவெளியின் பின்னர் 1.30 க்கு 3 ஆவது அமர்வு நடைபெற்றது. மாலை 3.00 மணிக்கு 4 ஆவது அமர்வுடன் மாலை 4.00 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது.

25 ஆவது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவியில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...