புத்தாண்டு தினத்தன்று மண்வெட்டித் தாக்குதலில் ஒருவர் பலி | தினகரன்

புத்தாண்டு தினத்தன்று மண்வெட்டித் தாக்குதலில் ஒருவர் பலி

 
புத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பெரும்குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
 
இதன்போது இராசையா சவுந்தராஜன் (வயது-32) என்பவரே மண்வெட்டி தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அத்துடன் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளனா்.
 
இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது:-மது போதையில் காணப்பட்ட இருவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாகி பின்னர் கோஸ்டி மோதலாக மாறியது.இதன்போது ஒருவா் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளாா்.
 
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய பொலிசார் விஷேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) 

Add new comment

Or log in with...