பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி | தினகரன்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி

பொதுநலவாய அரச தலைவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி-President Maithripala Sirisena at CHOGM Inauguration Ceremony

 

பொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் இன்று (19) முற்பகல் பக்கிங்ஹாம் மாளிகையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் பங்குபற்றினார்.

“பொதுவான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக இடம்பெற்ற மோல்டா அரசு தற்போது பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வருவதுடன், இம்முறை மாநாட்டின் போது அமைப்பின் தலைமைத்துவம் ஐக்கிய இராச்சியத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் 4.00 (இலங்கை நேரம் பி.ப. 8.30) மணியளவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 


Add new comment

Or log in with...