இஸ்ரேலுக்குள் ஊடுருவிய காசா சுரங்கப்பாதை தகர்ப்பு | தினகரன்

இஸ்ரேலுக்குள் ஊடுருவிய காசா சுரங்கப்பாதை தகர்ப்பு

 

காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் வகையில் பலஸ்தீன போராளிகளால் தோண்டப்பட்ட மிகப்பெரிய சுரங்கப் பாதை ஒன்றை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் கண்டுபிடித்ததில் மிக நீண்டதும் ஆழமானதுமான சுரங்கப் பாதையாக இது இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மன் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக தோண்டப்பட்டதாக கூறி 30க்கும் அதிகமான சுரங்கப்பாதைகளை அழித்துள்ள இஸ்ரேல், 2014 காசா யுத்த காலத்தில் இருந்து இந்த சுரங்கப் பாதை தோண்டப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளால் தோண்டப்படும் இவ்வாறான சுரங்கப் பாதைகளை அழிப்பதற்கு இஸ்ரேல் அதிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. 


Add new comment

Or log in with...