இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை | தினகரன்

இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை

நாட்டின் பல பாகங்களில் மாலை நேரம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல் மாகாணம், தெற்கு, வடமேல், சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை வரை எதிர்பார்க்கப்படுவதாகவும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடுமையான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை வடக்காக பயணிக்கும் சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுக்கும் என்றும் குறிப்பாக கிளிநொச்சி, வட்டக்கச்சி, இரட்டுமடு  ஆகிய பிரதேசங்களில் நாளை (15) 12.10 மணிக்கு உச்சம் கொடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...