Thursday, March 28, 2024
Home » அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

by Prashahini
November 13, 2023 1:04 pm 0 comment

அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 7,800 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் ரூ. 10,000 இனால் அதிகரிக்கப்படும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து தற்போது பாராளுமன்றில் உரையாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஜனவரி 2024 முதல் அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாத சம்பளத்துடனேயே வழங்கப்படும்.

இதற்கமைய தற்போது ரூ. 7,800 ஆக உள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரூ. 17,800 ஆக உயர்த்தப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT