பங்களாதேஷின் பரபரப்பான வழக்கிற்கு நீதிமன்றில் தீர்ப்பு | தினகரன்

பங்களாதேஷின் பரபரப்பான வழக்கிற்கு நீதிமன்றில் தீர்ப்பு

 

பங்களாதேஷில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வழக்கொன்றில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட முஸ்லிமாக மதம் மாறிய பெண் ஒருவரை தனது கணவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு ஹுமயுன் பாரித் லாசு என்பவரை திருமணம் முடித்த பின் ஹொஸ்னா அரா லாசு என்ற பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருப்பதாக நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் அவரது மரணத்திற்கு முன் அவர் இந்து மதத்திற்கு திரும்பியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் வாதிட்டு வந்தனர்.

இந்த கலப்பு திருமணத்திற்கு குடும்பத்தில் எதிர்ப்பு வந்ததை அடுத்து குழப்பத்திற்கு மத்தியில் 21 வயது லாசு 2014இல் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து அவரது 18 வயது மனைவி நீரில்மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பங்களாதேஷில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் உடலை இந்து வழக்கப்படி தகனம் செய்ய குடும்பத்தினர் கோரியதோடு அவரை இஸ்லாமிய வழக்கப்படி நல்லடக்கம் செய்ய கணவனின் குடும்பத்தினர் கோரினர். 


Add new comment

Or log in with...