பறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது | தினகரன்

பறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது

ஏர் சீனா விமானம் ஒன்றை திசைதிருப்பக் கோரி விமானப் பணிப்பெண்ணை பேனாவை கொண்டு அச்சுறுத்திய நபரை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தை அடுத்து 41 வயது ஷு என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டுள்ளது. ஷஹ்ஷாவில் இருந்து பீஜிங்கை நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் சீனா விமானமான சி.ஏ. 1350, ஹெனான் மாகாணத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமானப் பணிப்பெண்ணின் கழுத்தி பேனாவை ஒரு ஆயுதமாக வைத்து நபர் ஒருவர் அச்சுறுத்தும் புகைப்படம் ஒன்று சீன சமூக ஊடகத்தில் பரவியுள்ளது. 


Add new comment

Or log in with...