பொதுநலவாய உச்சி மாநாடு இலண்டனில் ஆரம்பம் | தினகரன்

பொதுநலவாய உச்சி மாநாடு இலண்டனில் ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் 25ஆவது மாநாடு இலண்டனில் ஆரம்பமாகியுள்ளது. 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இலண்டன் மாநகரில் நடைபெறும் இம் மாநாடு "பொதுவான எதிர் காலத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.

சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, நிலையான அபிவிருத்தி ஆகிய அம்சங்களின் கீழ் உறுப்பு நாடுகளின் நோக்கங்களை அடைந்து கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறாார்.

அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு 19ஆம் திகதி காலை ஆரம்பமாகிறது. பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை எலிசபெத் மகாராணி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.

பொதுநலவாயம்(கொமன்வெல்த்) எனப்படுவது பெரும்பாலும் பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்ட நாடுகளாக இருந்த 53 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரண்டாம் உலகப்போரின் பின்னர்பிரித்தானியாவின்ஆட்சிக்குட்பட்டிருந்த பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைத்தையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய "பொதுநலவாயம்" எனும் அமைப்பை உருவாக்கியது.

1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பு நாடுகள் "கட்டற்றவை மற்றும் சமமானவை" என்று நிறுவப்பட்டது. இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக திகழ்ந்த அரசி எலிசபெத் II மகாராணி, பொது நலவாயத்தின் தலைவராக்கப்பட்டார்.

பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 16 உறுப்பு நாடுகளில் எலிசபெத் II, நாட்டுத் தலைவர் தகுதியில் உள்ள அரசியும் ஆவார். 32 உறுப்பு நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது.

பொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும் பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுகிறது.

உறுப்பு நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள் மற்றும்சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்றுகூடியுள்ளன. இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. 2013 ஒக்டோபர் 3ஆம் திகதி 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த கம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து விலகியது.

பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கண்டங்களிலும் பரவிய 29,958,050 km2 (11,566,870 sq mi)க்கும் கூடுதலான நிலப்பரப்பைகொண்டது. இது உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தைகொண்டது. இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது. இதுஉலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும். 2012இல் பொதுநலவாயத்தின்மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது. இதனை கொள்வனவு ஆற்றல் சமநிலையைக் (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும்.

இந்த அமைப்பு 2022 ஆம் ஆண்டுக்கான கொமன்வெல்த் போட்டியை தென் ஆபிரிக்காவின்டர்பன் நகரில் நடத்தவுள்ளது. இது நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் தென் ஆபிரிக்காவிலேயே கொமன்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது.

1959 ஆம் ஆண்டில் டொமினிய நாளில் கனடாவில் உரையாற்றியராணி எலிசபெத் II, 1867 ஜூலை 1 ஆம் திகதி கனடாவின் கூட்டமைப்பு "பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளான முதல் சுதந்திர நாடு" என்று அறிவித்தார். "எனவே இது சுதந்திர நாடுகளின் சங்கத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. இப்போது இது பொதுநலவாய நாடுகள் என அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ பிரதம மந்திரிகளின் மாநாடு முதன்முதலாக 1887 ஆம் ஆண்டில் நடந்தது. இது 1911 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய மாநாடுகள் உருவாக வழிவகுத்தது.

பொதுநலவாயம் ஏகாதிபத்திய மாநாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது.ஜோன் ஸ்முட்ஸ் 1917 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் "பாரிஸ் அமைதி மாநாட்டில்" "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு உறவுகள் மற்றும் சார்பற்ற மாற்றங்களை" பற்றிய தனது தொலைநோக்கு திட்டங்களை முன்மொழிந்தார்.

1921 ஆம் ஆண்டின் ஆங்கிலோ- ஐரிஷ் உடன்படிக்கைக்கமைய முதன் முதலாக ஏகாதிபத்திய சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் முதன் முதலாக ஐரிஷ் சுதந்திர அரசு பாராளுமன்ற உறுப்பினர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டபோது பிரிட்டிஷ் இராச்சியம் என்ற வார்த்தைக்கு பதிலாக பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் என்பது பயன்படுத்தப்பட்டது.

1926 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய நாடுகள் மாநாட்டின் பால்ஃபோர் பிரகடனத்தில், பிரிட்டன் மற்றும் அதன் தலைவர்கள் இவ்வாறு முடிவெடுக்க ஒப்புக்கொண்டனர், அனைத்து உறுப்பு நாடுகளையும் "சமமான நிலையிலும், உள்நாட்டு அல்லது வெளி விவகாரங்களில் எந்தவொரு அம்சத்திலும் தலையடுவதில்லை என்று பிரகடனபடுத்தப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக இணைந்திருந்தாலும்அரசியலமைப்பின் பொதுவான விசுவாசத்தாலும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றது." உறவு தொடர்பான இந்த அம்சங்கள் 1931 ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் விதி சட்டத்தின் மூலம் கனடாவின் ஒப்புதல் இல்லாமல் முறையானவை என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் நடைமுறைக்கு அமர்த்த வேண்டும். நியூஃபவுண்ட்லேண்ட் 1967 பெப்ரவரி 16 இல் அதன் பாராளுமன்ற ஒப்புதலுடன் நியூஃபவுண்ட்லேண்ட் அரசாங்கத்தை களைத்து தானாக லண்டன் நேரடி கட்டுப்பாட்டிற்கு திரும்பியது. பின்னர் நியூஃபவுண்ட்லேண்ட் 1949 இல் கனடாவின் 10வது மாகாணமாக இணைந்தது. அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 1942 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்ட தத்தெடுப்பு விதியின் படியும் மற்றும் 1949 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்ட தத்தெடுப்பு விதியின் படியும் முறையாக ஒப்புதல் வழ்ங்கியது.

தென் ஆபிரிக்க ஒன்றியத்திற்கு வெஸ்ட் மினிஸ்டரின் சட்டத்தை நடைமுறைக்கு எடுக்க வேண்டிய தேவையில்லை என்றாலும் தென் ஆபிரிக்காவின் நிலையை ஒரு இறையாண்மை மாநிலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக 1934 ஆம் ஆண்டில் யூனியன் சட்டத்தின் நிலைமற்றும் ரோயல் எக்ஸிகியூட்டிவ் செயல்பாடுகள் மற்றும் சீல்ஸ் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

இரண்டாம் உலக போர்முடிவடைந்த பின் பிரிட்டிஷ் பேரரசு படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நாடுகள், பொதுநலவாய பகுதிகள் அல்லது குடியரசுகள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகள் சுதந்திர நாடுகளாகிவிட்டன. ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்ட 14 பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசங்கள் உள்ளன. ஏப்ரல் 1949 இல்லண்டன் பிரகடனத்தின் பின்னர் "பிரிட்டிஷ்" என்ற பதம் "பொதுநலவாயம்" என்று மாற்றப்பட்டது.

மியன்மார் (1948 இல் பர்மா என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே போரின்போது பிரிட்டிஷ் கொலனிகளாக பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக இல்லாமல் இருந்தன.


Add new comment

Or log in with...