பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது பிரபல பாடசாலை வீரர்களிடையே போட்டி | தினகரன்

பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது பிரபல பாடசாலை வீரர்களிடையே போட்டி

முதலாம் தவணைக்கான பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிவரை வாக்களிப்பு தொடங்கியுள்ளதால் ஒப்சேவர் மொபிடெல் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டி சூடுபிடித்துள்ளது.

மாபெரும் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாக வாக்களிப்பு சூடுபிடித்துள்ளதுடன் மூன்று பிரிவுகளின் கீழ் நடாத்தப்படும் போட்டியானது அதன் இறுதிக்கட்டத்தில் ஆர்வத்துடன் விளையாடும் மோதல் ஒன்றாக மாறவேண்டும். வருடத்திற்கான ஒப்சேவர் –மொபிடெல் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டிக்கான வாக்களிப்பு கூப்பன்கள் டெய்லி நியூஸ், சண்டே ஒப்சேவர், தினமின மற்றும் தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.

இந்த மெகா போட்டிக்கென இலங்கையில் தேசிய செல்லிட வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடெல் ஆகியவற்றின் தலைவர் பீ. ஜீ. குமாரசிங்கவின் பணிப்பின் பேரில் மேற்படி நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா கடந்த 11 வருடங்களாக நடைபெற்று வரும் போட்டியின் வெற்றிக்கு பிரதான வகிபாகத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் புள்ளி வழங்குநர்கள் சங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகியவற்றின் நீண்டகால சம்பந்தத்துடன் வருடத்திற்கான ஒப்சேவர்- மொபிடெல் பிரபல்யமான கிரிக்கெட் வீரர் போட்டியானது கடந்த 1979 ஆம் ஆண்டு தொடக்கம் மலமடைந்து வந்துள்ளது.

வருடத்திற்கான 40 ஆவது ஒப்சேவர்- மொபிடெல் பி்ரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் மாபெரும் விருதுகள் வழங்கும் வைபவம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் நடன விருந்து அறையில் நடைபெறவுள்ளது. மேற்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வைபவத்தில் இந்த கௌரவமிக்க விருதினை முதன் முதலாகப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் தலைவராக விளங்கி சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி நடுவருமான ரஞ்சன் மடுகல்ல முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது மேற்படி மெகா போட்டியானது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தமது ஆளுமை முத்திரைகளைப் பதித்துள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கியுள்ளது.

ரஞ்சன் மடுகல்லைக்கு மேலாக, உலகிலேயே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பெருமைக்குரியவரான முத்தையா முரளிதரன், சகலதுறை நட்சத்திர ஆட்டக்காரரான சனத் ஜயசூரிய மற்றும் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இந்த மெகா போட்டியில் சிறந்த வீரருக்கான விருதுகளைப் பெற்ற பின்னரே தேசிய அணிக்குள் உட்பிரவேசித்தமை கவனிக்கத்தக்கது.

மேற்படி ‘மெகா’ போட்டிக்கான முதலாவது விருது வழங்கும் வைபவம் குறித்து அண்மையில அவர்கள் வழங்கியிருந்த நேர்காணல்களின்போது கடந்த 39 வருடங்களாக உள்நாட்டு பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கென ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகை கொண்டுள்ள வகிபாகத்தை அவர்கள் வியந்து பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அறிய விருதினை முதன் முதலில் தனதாக்கிக்கொண்ட ரஞ்சன் மடுகல்லை இது குறித்து கருத்து வெளியிடுகையில், இவ்வளவு காலமாக இந்த மெகா போட்டியைத திறம்பட நடாத்தி வருகின்றமைக்காக ‘லேக் ஹவுஸ்’ நிறுவனமும் சண்டே ஒப்சேவரும் பாராட்டுக்குரியவையென்றார்.

உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். “வருடத்திற்கான ஒப்சேவர் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதினை வென்றெடுப்பதே எந்தவொரு வீரரினதும் கனவாகும். இந்தப் போட்டியில் வட மாகாண வீரர்களும் ஏனையோருடன் இணைந்து விளையாடுவதைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் மேற்படி விருதை வென்றவரும் முன்னாள் இலங்கை அணித் தலைவரும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி நடுவருமான ரொஷான் மகாநாம இது பற்றி கூறுகையில், இந்த மெகா போட்டியானது ஒவ்வொரு பருவகால முடிவிலும் எப்போதும் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்தே வந்துள்ளது என்றார்.

முன்னாள் நாலந்தா கல்லுரி அணித் தலைவராக விளங்கி இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த அசங்க குருசிங்க இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ரொஷானுக்கு 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் கிடைத்திருந்தபோதே, அது எவ்வளவு கௌரவம் மிக்கதென்பதை நான் உணர்ந்துகொண்டேன் எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் இலங்கை அணித்தலைவரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் மேற்படி விருதினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், எனக்குள் ஏற்பட்டிருந்த அந்த ஆனந்த மயமான உணர்வை வெளிப்படுத்துவது கஷ்டமே என்றார். நான் மட்டுமல்ல, எனது பெற்றோர், சகோதரன் உறவினர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் அனைவருமே மனத்தில் வைத்துப் போற்றிய அந்தக் கணத்தை அனுபவித்தனர் என்றார்.

இதேபோன்று கடந்த 1990 இல் மேற்படி விருதை வென்றவரும் முன்னாள் அணித் தலைவருமான மாவன் அத்தபத்து மற்றும் கடந்த 2012 இல் மேற்படி விருதை தனதாக்கிய நிரோஷன் திக்வெல்லவும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. 


Add new comment

Or log in with...