அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட மீனவர்கள் பாதிப்பு | தினகரன்

அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட மீனவர்கள் பாதிப்பு

 
கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மீனவர் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதுடன் மாலை நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.  பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியத நிலையில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக  மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
 
கரைவலை, ஆள்கடல் , சிறு படகு மீன்பிடியாளர்கள் என சகல மீனவர்களும் இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் மழைபெய்து வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இடிமின்னலுடன் மழை பெய்வதால் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் பொதுமக்களை கேட்டுள்ளது.
 
(பெரியநீலாவணை விசேட நிருபர்)
 

Add new comment

Or log in with...