பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: அண்ணா அறிவாலயம், கருணாநிதி, ஸ்டாலின் வீட்டில் கறுப்புக்கொடி | தினகரன்

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: அண்ணா அறிவாலயம், கருணாநிதி, ஸ்டாலின் வீட்டில் கறுப்புக்கொடி

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், கருணாநிதி, முகஸ்டாலின் வீட்டில் நேற்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.

இந்த கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கி 14-ந் திகதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இராணுவ கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கினாலும், அதன் தொடக்க விழா நேற்று ஆர்பமானது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பிரதமர் மோடி, டில்லியில் இருந்து நேற்றுக் காலை சென்னை வருகிறார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், நேற்று எல்லோருடைய வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கறுப்பு உடையணிய வேண்டும் என்றும், கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி, ஸ்டாலின் வீட்டில் நேற்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. 


Add new comment

Or log in with...