சென்னை வந்த மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு | தினகரன்

சென்னை வந்த மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு

இராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக நேற்றுக் காலை சரியாக 9.36 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர் வரவேற்றனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் இராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த கண்காட்சி 14-ம் திகதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இராணுவ கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கினாலும், அதன் தொடக்க விழா நேற்றஞ வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

மேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதற்காக பிரதமர் மோடி டில்லியில் இருந்து நேற்றுக் காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து நேற்றுக் காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.


Add new comment

Or log in with...