புற்றுநோய் இருப்பதாக மோசடியில் ஈடுபட்ட ஆஸி. பெண்ணுக்கு சிறை | தினகரன்

புற்றுநோய் இருப்பதாக மோசடியில் ஈடுபட்ட ஆஸி. பெண்ணுக்கு சிறை

 

அவுஸ்திரேலியாவில் புற்றுநோய் இருப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

24 வயது ஹென்னா டிக்கன்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனக்கு மருத்துவச் செலவுக்குப் பணம் தேவை என்று கூறி 31,000 டொலர் தொகையைப் பெற்றுள்ளார்.

மெல்பர்ன் நீதிமன்றத்தில் ஹென்னா மீது ஏழு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பணம் பெற்ற அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஹென்னா தான் பெற்றுக்கொண்ட தொகையின் பெரும்பகுதியைச் சுற்றுலாவுக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகவும் செலவழித்துள்ளார். இது இழிவான செயல் என்றார் நீதிபதி.

மூன்று மாதச் சிறைத் தண்டனைக்குப் பின் 12 மாத சமூகச் சீர்திருத்தப் பணியில் ஹென்னா ஈடுபடுத்தப்படுவார்.

அதில் அவர் 150 மணி நேரம் சம்பளம் இல்லா சமூகப் பணியை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் ஹென்னாவுக்குப் போதைப்பொருள் மற்றும் மனநலச் சிகிச்சைகள் அளிக்கப்படும். 


Add new comment

Or log in with...