திகன அசம்பாவிதத்தில் இறந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் நஷ்டஈடு | தினகரன்

திகன அசம்பாவிதத்தில் இறந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் நஷ்டஈடு

கடந்த மார்ச் மாதத்தில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அத்தோடு காயமடைந்தவர்களுக்காக தலா இரண்டரை இலட்சம் ரூபா வீதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் இறந்த மூவரின் குடும்பங்களுக்கும் தலா 500,000 ரூபா வீதம் நஷ்டஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த சம்பவங்களின் போது காயமடைந்த நபர்களுக்காக, வைத்திய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250,000 ரூபாக்கு குறையாத நஷ்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுக்க இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி எம்.சுவாமிநாதன் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்ததோடு அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை திகன அசம்பாவிதம் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.பல பேரிடம் வாக்குமூலம் பெறப்படுவதோடு விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...